நடிகர் ஜெயம் ரவி நடித்த இறைவன்!!! டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!!

0
155

நடிகர் ஜெயம் ரவி நடித்த இறைவன்!!! டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு தற்பொழுது கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஐ.அஹமது அவர்கள் இறைவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா அவர்கள் இறைவன் திரைப்படத்தை இசை அமைத்துள்ளார். பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இறைவன் திரைப்படத்தை தயாரித்துள்ளது. இறைவன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழு இறைவன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.

தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி அவர்களும் நடிகை நயன்தாரா அவர்களும் சேர்ந்து நடித்துள்ள இறைவன் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 3ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் ஜெயம் ரவி இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இறைவன். மேலும் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் 2 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடிக்கவுள்ளார். இதன் மூலமாக நடிகை நயன்தாரா அவர்கள் நடிகர் ஜெயம் ரவி அவர்களுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous article12 ஜிபி ரேம் கொண்ட புதிய ஸ்மார்ட் போன்!!! இந்தியாவில் அறிமுகம் செய்த மோட்டோ நிறுவனம்!!! இதன் விலை இவ்வளவு ரூபாயா!!?
Next articleபுதிய மாற்றங்களுடன் அறிமுகமாகும் ராயல் என்பீல்ட் 350!!! விற்பனை செப்டம்பர் 3ம் தேதி தொடக்கம் !!