ஒரே நாளில் கோடீஸ்வரன்.! 7 வயது சிறுவனுக்கு அடித்த 7 கோடி ஜாக்பாட்..!! இதுதான் காரணமாம்?
இந்திய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு துபாய் லாட்டரி சீட்டில் ஒரு மில்லியன் டாலர் ஜாக்பாட் அடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட கனகராஜ் என்பவர் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் துபாயில் அஜ்மன் என்ற பகுதியில் குடிபெயர்ந்து அங்கு தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி இந்தியாவுக்கு தனது குடும்பத்துடன் வரும்பொழுது, துபாய் டியூடி பஃரி ரபேல் என்ற பிரபலமான லாட்டரி டிக்கெட் ஒன்றை தன் 7 வயது மகனுக்காக வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நேற்றைய முன்தினம் நடைபெற்றது. அதில் கனகராஜ் தன் மகனுக்காக வாங்கிய லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்து சிறுவனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இதைக்கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த சிறுவனின் குடும்பத்தினர் நேரில் சென்று அதைப் பெற்றுக் கொண்டனர்.
பணத்தை பெற்றுக் கொண்ட கனகராஜிடம் இதுகுறித்து கேட்டபோது, நான் ஏற்கனவே வாங்கிய இடத்தில் தனது தொழல் சார்ந்து அலுவலகம் ஒன்றை கட்டப்போவதாக கூறியுள்ளார். சிறுவனுக்காக வாங்கிய லாட்டரியில் மில்லியன் டாலர் ஜாக்பாட் அடித்த சம்பவம் பலரது வாயை பிளக்க வைத்துள்ளது.