பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த காதல் ஜோடி; வாழ முடியாமல் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்த கோர சம்பவம்!
பெற்றோரை எதிர்த்து வீட்டைவிட்டு ஓடி காதல் திருமணம் செய்த தம்பதிகள் தண்டவாளத்தில் தற்கொலை செய்துகொண்ட கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள பூங்குளம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த உமாபதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மகளான நந்தினி குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இரும்பு பட்டறையில் வேலை செய்துவந்த ராமதாசு நந்தினியின் காதலுக்கு இருதரப்பு பெற்றோலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பெற்றோர்களை எதிர்த்து வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் நேற்று இரவு ஆம்பூர் அருகேயுள்ள பச்சகுப்பம் பகுதியின் தார்வழி தண்டவாளத்திற்கு சென்றனர். அங்கு தண்டவாளத்தில் இருவரும் படுத்து கடைசியாக செல்பி எடுத்துவிட்டு, தற்கொலை செய்து கொள்வதற்காக ரயில் வரும்வரை அங்கேயை படுத்திருந்தனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற ரயில் இருவர் மீதும் ஏறியதில் உடல் துண்டாகிய நிலையில் காதல் ஜோடி இறந்தனர். மறுநாள் காலை ரயில் தண்டவாளத்தின் அருகே இருந்த பிணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தண்டவாளத்தின் அருகே இருந்த செல்போனில் காதல் ஜோடி இறப்பதற்கு முன்பு தண்டவாளத்தில் படுத்துக்கொண்டே எடுத்த செல்பி புகைப்படமும் அதில் பதிவாகி இருந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் சொல் கேட்டிருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று அங்கு கூடிய பொதுமக்கள் கருத்து கூறியதாக சொல்லப்படுகிறது.