திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி… உயிருடன் எரித்த சைக்கோ காதலன்..!

0
193

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை எரித்து கொன்ற சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம்,பனைப்பாளையம் பகுதியில் நேற்று பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிகொண்டிருந்துள்ளார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்ததோடு அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து விரைந்து மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த பூஜா என்பது தெரியவந்தது.மேலும், அந்த பெண் லோகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில், லோகேஷிடம் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். சம்பவதன்று, அந்த பெண் அவரை சந்திக்க காட்டுபகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது மீண்டும் அவரிடன் தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார். அதனால், ஆத்திரமடைந்த லோகேஷ் அந்த பெண்ணை தாக்கியதோடு அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தார். இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் லோகேஷை தேடி வந்த நிலையில், உடல்நிலை சரியில்லை என கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், பூஜாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Previous article12ம் வகுப்பு படித்து முடித்திருந்தால் மட்டும் போதும்…தமிழக அரசில் உடனடி வேலைவாய்ப்பு !
Next articleதமிழ்நாடு ரயில்வேயில் மாதம் ரூ.2 லட்சம் வரையிலான சம்பளத்தில் பணிபுரிய ஆசையா ? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க !