மதுவால் மகன் கொலை! தந்தை கைது!

0
116
Kill the professor in the dark! Proof T_shirt Pocket!
Kill the professor in the dark! Proof T_shirt Pocket!

மதுவால் மகன் கொலை! தந்தை கைது!
“திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்” அது அனைவரின் வாழ்கையில்
முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த வாழ்க்கை பிரதிப்புக்கும் ஏற்ப்பட்டது.
மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள அய்யன்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த இளங்கோவனின் மகனான பிரதிப்க்கு
திருமணம் முடிவாயிற்று .அதற்கான ஏற்பாடுகள் ஒரு மாதம் முன்பாகவே நடந்து கொண்டிருந்தன.
மணமகன் பிரதிப் மதுவுக்கு அடிமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.திருமண நாள் முன்னதாகவே
அவரது ஆண் நண்பர்கள் அனைவரும் மணமகன் பிரதிப்பிடம் பட்ச்லோர் பார்ட்டி கேட்டுள்ளனர்.
அதற்காக பிரதிப் தனது தந்தையான இளங்கோவனிடம் சென்று மது அருந்துவதற்கு பணம்
கேட்டுள்ளார் .
அதற்கு தந்தை இளங்கோவன் மறுத்திருக்கிறார்.நாளை உனக்கு திருமணம் வீட்டில் உறவினர்கள் எல்லோரும்
வந்திருக்கின்றனர். இந்த சமயத்தில் நீ இப்படி செய்வது தவறு;பார்ப்பவர்கள் நம்மை தவறாக நினைத்துக்
கொள்வார்கள். இதெல்லாம் வேண்டாம் என்று தந்தை இளங்கோவன் கூறியிருக்கிறார்.தந்தை சொல்வதை
மணமகன் பிரதிப் கேட்கவில்லை.இப்பொழுது நீங்கள் மது அருந்துவதற்கு பணம் தந்தால் மட்டும் தான்
இந்த திருமணம் நடக்கும் இல்லை என்றால் இந்த திருமணம் நடக்காது என்று கூறியிருக்கிறார்.

இப்படியே இருவருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. கோபமடைந்த தந்தை இளங்கோவன்
கோடரியால் தனது மகன் பிரதிப் கழுத்தில் தாறுமாறாகத் தாக்கிருக்கிறார்.
சம்பவ இடத்திலேயே பிரதிப் உயிர் இழந்தார்.அவரது உறவினர்களுக்கு அங்கே என்ன
நடந்தது என்பது கூட விவரமாக தெரியாது! திருமண வீடே கதறி அழுதனர்,தந்தை
இளங்கோவன் வாடிபட்டி அருகே உள்ள காவல் நிலையத்தில் தானே சென்று சரணடைந்தார்.
மகனை கொன்று கொலைக் குற்றவாளியனார் தந்தை இளங்கோவன்.காவல்துறையினர் சம்பவ
இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பேரத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

“மதுவால் நாட்டில் பல மோசமான சம்பவங்கள் நடந்து வருகிறது”
மதுவின் தீமை மற்றவர்களை எந்த அளவில் பாதிக்கிறது
இன்றும் மதுவால் பல குடும்பங்கள் நடுரோட்டில் நிற்கிறது என்பதை
இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறிந்துக்கொள்வோம்.

Previous articleசிகிச்சையின் போது கதறி அழுத அச்சுமா!! ஆறுதல் கூறும் சினிமா பிரபலங்கள்!!   
Next articleநடிகர் சூர்யா படத்தில் நடிக்க போட்டி போடும் பாலிவுட் நடிகர்கள்!! யாருக்கு சான்ஸ் கொடுப்பார்??