சிறப்பு காட்சிக்கு அனுமதி வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு!!! இனி தமிழக அரசு கைகளில் தான் முடிவு இருக்கின்றது!!!
லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தர வேண்டும் என்று லியோ படக்குழு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கின்றது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 19ம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் வழக்கம் போல லியோ திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிகள் அனுமதிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சிறப்பு காட்சிகளான 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு தமிழக அரசு முதலில் மறுப்பு தெரிவித்தது.
அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் லியோ திரைப்படம் வெளியாகும் நாளா அக்டோபர் 19ம் தேதி மட்டும் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி அளித்து மேலும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை 5 நாட்களுக்கு ஒரு நாளுக்கு 5 காட்சிகள் லியோ திரைப்படத்தை திரையிடலாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அனைவரும் சிறப்பு காட்சிகள் இருக்கின்றது என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்கள். அதற்கு அடுத்த நாளே அந்த மகிழ்ச்சிக்கு தமிழக அரசு முற்றுப் புள்ளி வைத்து விட்டது.
அதாவது சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்ட நாளுக்கு அடுத்த நாள் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தர முடியாது என்று அரசாணை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.
இதையடுத்து லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தர வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதி மன்றம் வழக்கை இன்று(அக்டோபர்17) ஒத்தி வைத்தது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் லியோ திரைப்படத்தின் 4 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தருமா என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் தற்பொழுது மிகப் பெரிய அதிர்ச்சியை ரசிகர்களுக்கு தந்துள்ளது.
அதாவது சென்னை உயர் நீதிமன்றம் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் “லியோ திரைப்படத்திற்கு 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடுவதற்கு அனுமதி தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு போட முடியாது.
ஆனால் 4 மணி காட்சிகளுக்கு பதிலாக 7 மணிக்கு லியோ திரைப்படத்தை திரையிடுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் அரசிடம் கேட்கலாம். அதை தமிழக அரசு பரிசீலக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.