பேரனின் பிறப்புறுப்பில் ரத்தக்காயம், மயங்கிய பேத்தி.! மதுரையை உலுக்கிய கொலை சம்பவம்!

Photo of author

By Jayachithra

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம்
பகுதியில் சேரன் நகர் நகப்பா காலனியில் பாஸ்கர் எனும் பொறியாளர் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் இருந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆரியன் மற்றும் ஆரிகா ஶ்ரீ என்ற இரட்டை குழந்தை பிறந்துள்ளது..

குழந்தைகளை பராமரித்து கொள்ள ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பாஸ்கரன் வெளியில் சென்றிருந்த சமயம் அவரது மனைவியும் அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்புக்கு சென்று வீடு திரும்பி உள்ளார்.

அப்போது தாயார் சாந்தி மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்று ஐஸ்வர்யா கேட்கவும்
“இரு குழந்தைகளையும் யாரோ கடத்திக் கொண்டு போய் விட்டார்கள்” என்று கூறியுள்ளார். இதனால் பதறிய தாய் ஐஸ்வர்யா தனது குழந்தைகளை தேட ஆரம்பித்தார். அப்போது ஆண் குழந்தை படுக்கையில் சடலமாக கிடந்தான். அவனது பிறப்புறுப்பில் காயங்கள் இருந்தன..

பெண் குழந்தை குளியல் அறையில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். குழந்தையின் உடல் முழுவதும் காயங்களுடனும் அழுக்குத் துணியால் மூடப்பட்டும் இருந்தது. இதனை பார்த்து கதறி அழுத தாய் ஐஸ்வர்யா தனது கணவர் பாஸ்கரனுக்கு தகவல் தந்து வரவழைத்தார்.. இதற்கிடையில் சாந்தி தப்பி ஓடினார்.
பிறகு உடனடியாக துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது..

விரைந்து வந்த காவல் அதிகாரிகள் காயமடைந்த பெண் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ஆண் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவலர்கள் விசாரிக்க தொடங்கினர். அப்போது
தன்னுடைய பேரன் மற்றும் பேத்தியை கொடூரமாக கொலை செய்ய பாட்டி சாந்தி முயற்சித்தது தெரியவந்தது.

மேலும் அவர் கடந்த பதினைந்து வருடங்களாகவே மனரீதியிலான பாதிப்பிலிருந்தது தெரியவந்துள்ளது. தற்போது காவல்துறை அவரை தீவிரமாக தேடி வருகிறது.
இதில் அதிர்ச்சி அளிக்கும் செய்தி என்னவென்றால் இவரது கணவர் மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் முன்னாள் துணை ஆய்வாளராக
பணி செய்தவர்.
இச்சம்பவம் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.