மதுரையில் அமையுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் : முதல் போட்டி யார்- யாருடன்?

0
348

மதுரையில் அமையுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் : முதல் போட்டி யார்- யாருடன்?

மதுரையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. வேலம்மாள் கல்வி குழுமம் இந்த விளையாட்டு மைதானத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்தில் உயர்தர வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் பணிகள் நிறைவுபெற உள்ளன. இம்மைதானம் பயன்பாட்டுக்கு வரும்போது, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்குக்கு அடுத்தபடியாக மதுரையில் அமையுள்ள விளையாட்டு மைதானம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தைக் கொண்ட நாடு இந்தியா. நம் தமிழ்நாட்டில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான மட்டுமே உள்ளது. சேலம், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கிரிக்கெட் மைதானம் தற்போது உருவாக்கப்பட்டிருந்தாலும் அது சர்வதேச அளவில் இல்லை. கிரிக்கெட் வீரர் நடராஜன் அவர்கள் தனது சொந்த முயற்சியால் சேலத்தில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் கிரிக்கெட் மைதானங்கள் இரண்டு, மூன்று தான் உள்ளன. இந்நிலையில் தென்தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் புல் தரையில் ஆடக்கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. அதனை போக்கும் வகையில் தற்போது வேலம்மாள் கல்வி குழுமத்தினர் மதுரையில் மிக பிரமாண்டமாக சர்வதேச அளவில் கிரிக்கெட் மைதானத்தை அமைக்க உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து மதுரை வேலம்மாள் குழுமம் தங்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. சேப்பாக்கத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் மேற்கூரை வசதியுடன் கூடிய கேலரிகள் கொண்ட பெரிய அரங்கமாக இது அமைக்கப்பட்டு வருவது இதன் சிறப்பம்சமாகும். இதன் மூலம் கோடிக்கணக்கில் அவர்களுக்கு பண லாபம் உண்டு என்றும் பேசப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இம்மைதானத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்திய கிரிகெட் அணியுடன் விளையாட போகும் எதிரணி யார் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும் என தெரிகிறது.

 

 

 

 

 

Previous articleதமிழகத்திற்கு மற்றொரு பெருமை!!! ஜி20 மாநாட்டில் இடம்பெறும் 28 அடி உயரத்தில் நடராஜர் சிலை!!!
Next article4000 கிலோ மீட்டர் படுத்தபடியே இராமேஸ்வரத்துக்கு வந்த சாதுக்கள்!!!