தமிழகத்திற்கு மற்றொரு பெருமை!!! ஜி20 மாநாட்டில் இடம்பெறும் 28 அடி உயரத்தில் நடராஜர் சிலை!!!

0
38

தமிழகத்திற்கு மற்றொரு பெருமை!!! ஜி20 மாநாட்டில் இடம்பெறும் 28 அடி உயரத்தில் நடராஜர் சிலை!!!

புதிய பாராளுமன்றத்தில் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் செங்கோல் வைக்கப்பட்டது போல ஜி20 மாநாட்டில் 28 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை இடம்பெற்றுள்ளது.

ஜி20 மாநாடு பிரகதி மைதானத்தில் இருக்கும் பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் 20 நாடுகளை சேர்ந்த தலைவர்களும், 9 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். கலாச்சாரம் ரீதியில் இந்த 29 நாடுகளையும் இணைக்கும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாட்டில் பங்கேற்கவுள்ள 29 நாடுகளை சேர்ந்த தலைவர்களும் இந்த கலாச்சார ரீதியில் அமைக்கப்பட்ட இந்த பாதை வழியாக செல்லவுள்ளனர். கலாச்சார ரீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையில் 29 நாடுகளின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பொருட்கள் காட்சிபடுத்தப்படவுள்ளது.

அந்த வகையில் நம் இந்திய நாட்டின் கலிச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து விதமான மையப் பொருட்கள் கருத்தில் கொள்ளப்பட்டது. அதில் தமிழகத்தில் சோழர் காலத்தில் சிலைகளை உருவாக்கும் கலை தேர்வு செய்யப்பட்டது.

உலக அளவில் புகழ் பெற்ற இந்த கலையின் படி தற்பொழுது 28 அடி உயரம் கொண் பிரம்மாண்டமான நடராஜர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 28 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான நடராஜர் சிலையில் தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, இரும்பு, ஈயம், வெள்ளீயம், பாதரசம் ஆகிய உலோகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பண்டைய கால சோழர் முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டமான நடராஜர் சிலை 28 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்டுள்ளது. மேலும் 25 டன் எடை கொண்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான நடராஜர் சிலையின் மதிப்பு 10 கோடி ரூபாய் ஆகும். தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள 28 அடி உயரம் கொண்ட இந்த நடராஜர் சிலை தான் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை ஆகும்.

இந்த பிரம்மாண்டமான 28 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலையை தயாரிக்கும் பணி தமிழ்நாட்டில் கும்பகோணத்தை சேர்ந்த சுவாமி மலையில் உள்ள தேவ சேனாதிபதி சிற்பக்கூடத்திற்கு வழங்கப்பட்டது. அதன்படி ஸ்தபதிகள் தேவ.ராதாகிருஷ்ணன், தேவ.சுவாமிநாதன், தேவ.கண்டன் ஆகியோர் இந்த 28 அடி உயர நடராஜர் சிலையை வடிவமைத்தனர்.