மதுரை ஸ்டைல் ஆட்டு குடல் குழம்பு!! இப்படி செய்தால் மிகவும் பிரமாதமாக இருக்கும்!!
அசைவ உணவு அனைவருக்கும் பிடித்த ஒன்று.இதில் கோழிக்கறி,ஆட்டுக்கறி போன்றவை அதிகளவில் சமைத்து ருசி பார்க்கப்பட்டு வரும் நிலையில் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரக்கூடிய ஆட்டு குடலில் மிகவும் டேஸ்டாக குழம்பு செய்வது அதுவும் மதுரை ஸ்டைலில் செய்வது எப்படி என்ற செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
ஆட்டுக்குடல்
வெங்காயம் – 2
தக்காளி – 2
தேங்காய் – 1/2 கப்(துருவியது)
கசகசா – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
பட்டை – 3
கிராம்பு – 10
சோம்பு – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
மிளகாய் தூள் – தேவையான அளவு
மல்லித்தூள் – தேவையான அளவு
கரம் மசாலா – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 முதல் 4 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – சிறிதளவு
புதினா – சிறிதளவு
செய்முறை:-
*ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்,பூண்டு,சோம்பு மற்றும் கசகசாவை சேர்த்து மைய்ய அரைத்து கொள்ள வேண்டும்.
*ஒரு பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி கொள்ளவும்.பின்னர் அதில் ஆட்டுக்குடலை போட்டு நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
*அடுப்பில் குக்கர் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் பட்டை, கிராம்பு, சோம்பு, மஞ்சள் தூள் போட வேண்டும்.பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள குடலை சேர்க்கவும்.
பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து வேக விடவும்.3 முதல் 4 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
*தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
*அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயதை போட்டு வதக்கவும்.
*பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு கிளறவும்.அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து வதக்கவும்.
*அடுத்து தேவையான அளவு மிளகாய் தூள்,மல்லித்தூள்,கரம் மசால் போட்டு வதக்கி வேக வைத்துள்ள குடலை போட்டு நன்றாக கிளற வேண்டும்.
*பின்னர் நன்கு கொதிக்கும் சமயத்தில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
*பின்னர் வாசனைக்காக கொத்தமல்லி மற்றும் புதினா தழைகளை போட்டு இறக்கவும்.