சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்!
சோற்றுக்கற்றாழையை பயன்படுத்துவதன் மூலமாக கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம் கற்றாழைகளின் இதமான கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிருங்கற்றாழை என பல விதங்கள் உள்ளது.
அதில் ஒன்று சோற்றுக்கற்றாழை ஆகும். சோற்றுக்கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 12, ஆன்ட்டி ஆக்சிடென்ட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் 75க்கும் மேற்பட்ட நுண்ணூட்டச் சத்துக்களை கொண்டுள்ளது.சோற்றுக்கற்றாழை நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது .
செரிமான கோளாறுகளை குணமாக்குகிறது:செரிமானம் சார்ந்த கோளாறுகளான அஜீரணம், நெஞ்செரிச்சல் ,வயிறு உப்பசம் என செரிமானம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
மேலும் வயிற்றில் உள்ள புண்களை குணமாக்குகிறது மற்றும் அல்சரையும் சரி செய்கிறது செரிமானம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்பட கூடியவர்கள் சோற்றுக்கற்றாழையை ஜூஸ் செய்து அருந்தி வருவதன் மூலமாக அனைத்து செரிமான பிரச்சனைகளும் குணமடைகிறது.
மலச்சிக்கல்: செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மலச்சிக்கல் மிகவும் முக்கியமானதாகும் நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் போதிய அளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் குறைவாக உள்ளதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய சோற்றுக்கற்றாழையில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
நார்ச்சத்தும் நிறைந்துள்ளது இவை செரிமானத்தை ஒழுங்குபடுத்தும் மற்றும் இதில் இருக்கக்கூடிய வழவழப்புத் தன்மை குடல் இறக்கத்தை தடுக்கிறது
உடல் சூட்டை குறைக்கும்:பொதுவாகவே அதிக வறட்சி உள்ள இடங்களில் வளரக்கூடிய உணவுகள் உடல் சூட்டை குறைக்கும் தன்மைகளை கொண்டிருக்கும். இந்த வகையில் மிக முக்கியமானது சோற்றுக்கற்றாழை உள்ளது. உடல் சூட்டினால் அவதிப்படக் கூடியவர்கள் தினமும் ஆலிவேராவை உட்கொள்வதன் காரணமாக உடல் சூடு தணிந்து உடலை புத்துணர்ச்சியாக வைக்கிறது
ரத்த அழுத்தத்தை குணப்படுத்துகிறது. ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நரம்பு மண்டலத்தில் கொழுப்பு படிவதன் மூலமாக ரத்த அழுத்தம் ஏற்படுகிறது சோற்றுக்கற்றாழையின் இருக்கக்கூடிய பி விட்டமின்ஸ் மற்றும் என்சைன்ஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது இவை ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது மற்றும் ரத்த நாளங்களையும் பலப்படுத்துகிறது.