பிக்பாஸ் ப்ளேபாய்க்கு நாளை திருமணம்!சமூகவலைதளத்தில் ரொமான்ஸ் பதிவு!
பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமான நடிகர் மஹத்துக்கு நாளை திருமணம் நடக்க இருப்பதை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமாண்டிக்கான பதிவைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் மஹத் ராகவேந்திரா சிம்புவின் பள்ளித் தோழன். தொழிலதிபரின் மகனான இவர் வல்லவன் படத்தில் சிறுவேடத்தில் நடித்திருந்தாலும் மங்காத்தா, ஜில்லா, சென்னை 28 பார்ட் 2 ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார். பின்னர் பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்துகொண்டதன் மூலம் சர்ச்சைகளின் நாயகனாக மாறினார்.
பிக்பாஸ் வீட்டில் யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோருடன் நட்பாகப் பழகிய அவர் விதிமுறைகளை மீறியதால் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் அவருக்கும் யாஷிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்பட்டது. இத்தனைக்கும் மஹத்துக்கு பிராச்சி மிஸ்ரா என்ற காதலி இருந்தார். இந்த பிக்பாஸ் காதலால் மஹத்தின் காதலி அவரை பிரிந்ததாக சொல்லப்பட்டது.
ஆனால் வெளியே வந்ததும் தனது காதலைப் புதுப்பித்துக் கொண்டார் மஹத். இதையடுத்து சமீபத்தில் அவருக்கு தனது காதலி பிராச்சி மிஸ்ராவுடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அவருக்கு நாளைத் திருமணம் நடக்கவுள்ள வேளையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நம் திருமணத்திற்கும் இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கிறது என்பதை நினைத்து பார்க்கும் போது நான் பாக்கியசாலியாக உணர்கிறேன். நீ என் வாழ்க்கையில் வந்து எல்லாவற்றையும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கிறாய். மோசமான நாட்களில் இருந்து நாம் நிறைய பாடம் கற்றுக் கொண்டோம், நல்லவற்றைக் கொண்டாடினோம். மற்றும் மிக முக்கியமாக, ஒவ்வொரு சண்டையிலும் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்துகொண்டோம். Thank you. I love you. Thank you FOR BEING YOU’ எனத் தெரிவித்துள்ளார்.