வேர்க்கடலை சட்னி இப்படி செய்து அசத்துங்கள்!! சுவை நாவை விட்டு போகாது!

0
107
#image_title

வேர்க்கடலை சட்னி இப்படி செய்து அசத்துங்கள்!! சுவை நாவை விட்டு போகாது!

நாம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் இட்லி,தோசை முக்கிய பங்கு வகிக்கிறது. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும். இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வது தான் மிக பெரிய வேலை.இந்த இட்லி,தோசைக்கு சட்னி வகைகளில் நெறைய இருக்கின்றது.அதில் சிறந்த சுவையான சட்னியான வேர்க்கடலை சட்னி செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*வேர்க்கடலை – 250 கிராம்

*காய்ந்த மிளகாய் – 4

*புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

*பூண்டு – 5 பல்

தாளிப்பதற்கு:-

*நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

*கடுகு – 1/4 ஸ்பூன்

*உழுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்

*சீரகம் – சிறிதளவு

*காய்ந்த மிளகாய் – 2

*கறிவேப்பிலை – சிறிதளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

1.அடுப்பில் கடாய் வைத்து வேர்க்கடலையை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும். வேர்க்கடலை வாசம் வரும் வரை வறுக்கவும்.பிறகு வேர்க்கடலை ஆறவைக்கவும்.

2.ஒரு மிக்ஸி ஜாரில் ஆற வாய்த்த வேர்க்கடலையுடன்,வர மிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.

3.பின் தாளிப்பு பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை சட்னியில் போட்டு கலந்து விடவும்.இந்த வேர்க்கடலை சட்னி இட்லி, தோசை, சாதம்,பழைய கஞ்சி இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Previous articleசுவையான பீர்க்கங்காய் தோல் சட்னி இப்படி செய்தால் ஒரு தட்டு சோறு பத்தாது!!
Next articleவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. ருசியான பிடி கொழுகட்டை சுலபமாக செய்யும் முறை!!