பிளாக் டீ இப்படி செய்து சுவைத்து பாருங்கள்.. டேஸ்ட் மறக்காது!
மக்கள் அதிகம் விரும்பி பருகும் பிளாக் டீ அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டு இருக்கிறது. பிளாக் டீ,சாயா,கடுங்காப்பி,கருப்பு தேநீர் என்று மக்களால் பல பெயர்களில் அழைக்கப்படும் இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.இவை உடலில் உள்ள அசாதாரண செல்களை அழிக்கிறது.இந்த கருப்பு தேநீரில் 2.4 கிராம் கலோரிகள்,0.4 கிராம் கார்போஹைட்ரேட்டுகள்,0.1 கிராம் நார்ச்சத்துக்கள்,0.1 கிராம் புரதங்கள் இருக்கின்றது.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
தண்ணீர் – 2 கப்
டீ தூள் – 1/2 தேக்கரண்டி
நாட்டு சர்க்கரை – தேவைகேற்ப
வர கொத்தமல்லி – 1/2 ஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
செய்முறை:-
1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
2.பின்னர் அதில் டீ தூள்,இடித்த இஞ்சி,கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
3.பின்னர் அதில் நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்க்க வேண்டும்.
4.நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைத்து அவற்றை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருக வேண்டும்.