நான் அரசியலுக்கு வராம பார்த்துக்கோங்க.. சூசமாக வார்னிங் கொடுத்த விஷால்..!!
நடிகர் விஷால் சமீபத்தில் தான் 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வர இருப்பதாகவும், மக்களுக்காக நிச்சயம் வருவேன் எனவும் கூறி இருந்தார். அதனை தொடர்ந்து நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தளபதி விஜய் ஸ்டைலில் சைக்கிளில் சென்று வாக்களித்தார். இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு விஷால் மறைமுக வார்னிங் கொடுத்துள்ளார்.
அதன்படி சமீபத்தில் ரத்னம் பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷால் கூறியதாவது, “நான் 2026ல் நிச்சயம் அரசியலுக்கு வருவேன். கூட்டணி, சீட்டு ஒதுக்கீடு இதையெல்லாம் யோசிக்காமல், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமா? உடனே யோசிக்காமல் ஒரு கட்சியை தொடங்கி விட வேண்டும். இப்பவும் சொல்றேன் என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.
நீங்க மக்களுக்கு நல்லது செஞ்சா நான் பாட்டுக்கு படத்துல நடிச்சிட்டு போய்க்கிட்டே இருப்பேன். நீங்க எதுக்காக இன்னொருத்தருக்கு வழிவிடுறீங்க. உங்க வேலைய நீங்க ஒழுங்கா செஞ்சா நாங்க ஏன் எங்க தொழிலை விட்டுட்டு உங்க தொழிலுக்கு வரப்போறோம். தமிழ்நாட்டுல குறைகள் இல்லாத இடமே இல்லை. எத்தனையோ கட்சிகள் இருந்தும் எந்த மாற்றமும் இல்லை.
நான் புதுசா வந்தா மட்டும் என்ன பண்ணிடபோறேனு தான் கேட்பாங்க. நான் ஒரு வாக்காளர என்னோட ஆதங்கத்தை சொல்றேன். அந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மக்களோட அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்வதில் தான் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு கட்டாயம் மாற்றம் தேவை” என கூறியுள்ளார்.