இந்த தோசையை செய்து சாப்பிட்டு பாருங்கள்! சளி என்பது உங்களை அன்டாது!

Photo of author

By Parthipan K

இந்த தோசையை செய்து சாப்பிட்டு பாருங்கள்! சளி என்பது உங்களை அன்டாது!

தற்போது மழைக்காலம் நீடித்து வருவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தும்மல், சளி, இரும்பல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் சளியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக தூதுவளை இலையின் மூலம் செய்யப்படும் உணவை உட்கொண்டு வந்தால் நோய் தொற்றிலிருந்து நம் உடலை பாதுகாக்கலாம் அந்த வகையில் தூதுவளை இலையில் ரசம், சட்னி மட்டுமே வைக்க முடியும் என்று பலரும் நினைத்து வருவார்கள். அதனை மாற்றும் வகையில் தற்போது தூதுவளையில் தோசை எப்படி செய்வது என்று அறியலாம்.

தேவையான பொருட்கள் :தூதுவளை இலை 15, புழுங்கலரிசி 1 கப், மிளகு 10, சீரகம் அரை டீஸ்பூன் ,பச்சை மிளகாய 2 ,உப்பு தேவையனாளவு, எண்ணெய் தேவையனாளவு மற்றும் நெய் அரை டீஸ்பூன். இந்த பொருட்கள் அனைத்தையும் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தூதுவளை தோசை செய்முறை :

முதலில் புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மிக்ஸியில் பச்சை மிளகாய், மிளகு, சீரகம், தூதுவளை இலை, உப்பு சேர்த்து நன்றாக அரைத்து, இதை அரைத்த மாவுடன் சேர்க்க வேண்டும்.

அதன் பின்னர் தோசைக்கல்லில் இந்த மாவை மிக மெல்லிய ஊத்தப்பம் போல ஊற்றி நெய், எண்ணெய் இரண்டையும் கலந்து அதை சுற்றிவர ஊற்றி, திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்துவிடலாம்.