BREAKING தமிழக அரசியலில் பரபரப்பு… முக்கிய கட்சியின் நட்சத்திர வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Photo of author

By CineDesk

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் அனலாய் சூடு பிடித்துள்ளது. ஒருபக்கம் கொரோனா தொற்றின் வேகமும் அதிகரித்து வருவது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த முக்கிய வேட்பாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Kamal

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அறியப்பட்ட சந்தோஷ் பாபு தன்னுடைய பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு சென்னை ஆஃபிஸர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் முழு நேர ஆசிரியராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் கமல் ஹாசனின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சந்தோஷ் பாபு தன்னை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து கொண்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை வேளச்சேரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சந்தோஷ் பாபு நேற்று முன் தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எனது வேளச்சேரி வாக்காள பெருமக்களுக்கு எனக்கு கொரோனா பாசிட்டீவ் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நான் எப்படிப்பட்ட துரதிர்ஷ்டசாலி, உங்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், வாக்குகளை பெற முடியாதவன் ஆகிவிட்டேன். நான் உங்களை டிஜிட்டல் மூலமாகவும் , எனது ஆதரவாளர்கள் மூலமாகவும் சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.