மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் முன்னணி ஹீரோவோடு நடிக்கும் மாளவிகா மோகனன்!

0
196

மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் முன்னணி ஹீரோவோடு நடிக்கும் மாளவிகா மோகனன்!

இயக்குனர் பா ரஞ்சித் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன. இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும். 2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை இயக்கி பிரபலமானார்.

சமீபத்தில் இவர் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் ரிலீஸான நிலையில், அடுத்து அவர் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிரார். கோலார் தங்க வயல்களில் வசித்த 19 ஆம் நூற்றாண்டு தமிழர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டும் உருவாக்கப்படுகிறதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று ஆந்திரா மாநிலம் கடப்பாவில் தொடங்கியது. இன்னும் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மற்றொரு படத்தில் பூ பார்வதி நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தும், அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லாமல் இருந்த மாளவிகா இன்ஸ்டாகிராமே கதியென்று இருந்தார். இப்போது முன்னணி இயக்குனர், முன்னணி ஹீரோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Previous article“எல்லாரும் விசாரிச்சாங்க… அவர் ஒரு வார்த்த கூட கேக்கலயே….” நண்பர்களிடம் புலம்பும் போண்டா மணி!
Next articleமீண்டும் லீக் ஆன வாரிசு ஷூட்டிங் காட்சி… இந்த முறை பாடலோடு… அதிர்ச்சியில் படக்குழு!