பிரதமர் மோடி மீது மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு!

Photo of author

By Parthipan K

பிரதமர் மோடி மீது மம்தா பானர்ஜி பகிரங்க குற்றச்சாட்டு!

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். பொருளாதாரம்  மிகவும் மந்தநிலையில் இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். அதற்கு பதிலாக அவர் பெட்ரோலின் குரல், டீசலின் குரல், தடுப்பூசியின் குரல் என்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

இதுவரை மத்திய அரசுக்கு நான் எழுதிய கடிதங்களுக்கு ஒரு பதிலும் வரவில்லை. கவர்னரை மாற்றக்கோரி கடிதம் எழுதியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்பொழுது பெட்ரோல் மக்களின் வாழ்வில் மிகவும் அத்தியாவசியமாகிவிட்டது. இந்நிலையில் பெட்ரோலின் விலை கடந்த சில மாதங்களில் கிடுகிடுவென உயர்ந்து நேற்று  100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

பிரதமருக்கு மக்களின் அவலத்தை கண்டுகொள்ள நேரம் இல்லை. அவர் இப்பொழுது அடுத்து எந்த நாட்டுக்கு பயணம் செய்யலாம் என்று வீட்டில் அமர்ந்து திட்டமிட்டு கொண்டிருப்பார். இப்படி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.