போர் பயிற்சி செய்ய கைகோர்க்கிறது இந்தியா மற்றும் இத்தாலி!

0
91

மத்திய தரைக்கடலில் நடைபெற்றுவரும் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஐஎன்எஸ் தபார் கப்பல், இத்தாலியின் நேபிள்ஸ் துறைமுகத்துக்கு சென்றது. அங்கு இன்று இந்திய கப்பலுக்கு இத்தாலிய கடற்படை உற்சாக வரவேற்பளித்தது. துறைமுகத்தில் தங்கியிருந்தபோது, கமாண்டிங் அதிகாரி கேப்டன் மகேஷ் மங்கிபுடி, நேப்பிள்ஸ் ஆணையகத்தில் மண்டல இத்தாலிய கடற்படை தலைமையகம் மற்றும் நேபிள்ஸில் உள்ள கடலோர காவல்படை தலைமையகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.

துறைமுகத்திலிருந்து புறப்படுகையில் இத்தாலிய கடற்படை முன்னணி கப்பலான ஐடிஎஸ் அன்டோனியோ மார்க் செக்லியாவுடன் கடல்சார் கூட்டணி பயிற்சியை ஜூலை 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் டிர்ஹெனியன் கடலில் ஐஎன்எஸ் தபார் கப்பல் மேற்கொண்டது. வான் பாதுகாப்பு நடைமுறைகள், கடலில் மீட்பு நடவடிக்கைகள், தகவல் தொடா்புப் பயிற்சிகள் முதலிய பல்வேறு கடல்சார் பயிற்சிகளில் இரு கப்பல்களும் ஈடுபட்டன.

இவ்வாறு இரு நாடுகளும் இணைந்து பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அந்த இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவு மேம்படுவது மட்டுமின்றி அவர்களின் போர் யுக்திகளையும், பகிர்ந்துகொள்ளலாம். இதனால் அந்த இரு நாடுகளும் வலிமை பெற முடியும்.

இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் மக்கள் அனைவரும் வரவேற்பு தந்துள்ளனர்.

author avatar
Parthipan K