ஆவடியை சேர்ந்த ஒருவர் மனைவியுடனான தகராறால் கோபத்தில் கட்டையை வைத்து அடித்து கொண்டிருக்கிறார்.
ஆவடியை அருகே திருநின்றவூர் சுதேசி நகர் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த சந்திரமோகன் (வயது 40). இவர், சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (36). இருவருக்கும் புவனாஸ்ரீ (8) என்ற மகளும், சஞ்சய்ஸ்ரீ மோகன் (5) என்ற மகனும் உள்ளனர்.
செல்வி அடிக்கடி வீட்டில் இருந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் . இதை சந்திரமோகன் கண்டித்து வந்தார்.
அக்டோபர் 7-ந் தேதி செல்வி, தனது கணவரிடம் சொல்லாமல் திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்துக்கு சென்றார். அங்கிருந்து நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு திரும்பி வந்தார். குழந்தைகளை கவனிக்காமலும் தன்னிடம் சொல்லாமலும் சென்றதால் சந்திரமோகன் கண்டித்தார். இதனால் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறில் ஆத்திரம் அடைந்த சந்திரமோகன், பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து மனைவி செல்வியின் தலையில் பலமாக தாக்கினார். மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில், அதை கவனிக்காமல் செல்வி வீட்டில் இருந்து அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று விட்டார். அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் செல்வி நீண்டநேரம் கோவில் வாசலில் விழுந்து கிடப்பதை பார்த்து சந்திரமோகனுக்கு தகவல் கொடுத்தனர்.
சந்திரமோகன் செல்வி சுயநினைவின்றி இருப்பதை அறிந்து உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.. அங்கு செல்வியை பரிசோதனை செய்த டாக்டர்கள், செல்வி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரமோகன், அக்டோபர் 10ந் தேதியான நேற்று திருநின்றவூர் போலீஸ் நிலையம் சென்று நடந்த விவரங்களை கூறி சரண் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாயும் இறந்து தந்தையும் இறைக்கு சென்றதால் அந்த குழந்தைகளின் நிலை அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.