அரிவாள் வாங்கியதால் ஏற்பட்ட அனுபவம்! முன்விரோதமே இதற்கு காரணம்! அரசின் புதிய ஆணையால் தப்பிய உயிர்!

0
119
The experience of buying a scythe! The reason for this is prejudice! Survivors of the new government order!
The experience of buying a scythe! The reason for this is prejudice! Survivors of the new government order!

அரிவாள் வாங்கியதால் ஏற்பட்ட அனுபவம்! முன்விரோதமே இதற்கு காரணம்! அரசின் புதிய ஆணையால் தப்பிய உயிர்!

தேவகோட்டை பகுதியில் சிதம்பரநாத புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அவரது மகன் வான்மீக நாதன் 31 வயதான இவரும், இவரது நண்பர் சுரேஷ் என்ற 35 வயதான இருவரும் சேர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுபான கடைக்கு சென்று உள்ளனர். அங்கு பாதையை அடைத்துக் கொண்டு ஒரு வண்டி நின்றது.

அது ஈலோலிவயல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சக்தி என்ற 29 வயது நபர் உடைய வண்டி ஆகும். பாதைக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தை குறித்து பேசியதன் காரணமாக இரண்டு பேருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. அப்போது வன்மீகநாதன் தாக்கப்பட்டார். அதற்குப் பழிக்குப் பழி வாங்குவதாக சக்தியை கொலை செய்ய திட்டமிட்டு வான்மீக நாதன் தேவகோட்டை வாரியார் வீதியில் உள்ள ஒரு கடையில் தீட்டிய அரிவாள்  வாங்கி உள்ளார்.

அதை அவரது நண்பர் சுரேஷ் முதுகில் வைத்துக் கொண்ட பிறகு, இருவரும் மீண்டும் மது கடைக்கு சென்றனர். தமிழக அரசு சமீபத்தில் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்கினால் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. எனவே கடைகாரர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட போலீசார் ஒரு மணி நேரமாக அந்த இரண்டு வாலிபர்களையும் கண்காணித்து வந்தனர்.

மதுபான கடையில் சக்தியை வெட்டுவதற்காக அரிவாள் எடுத்தபோது சுரேஷ் முதுகை அரிவாள் நன்றாக பதம் பார்த்தது. அதை வாங்கி வன்மீகநாதன் சக்தியை வெட்ட முற்பட்டபோது, போலீசார் அங்கு வந்து இரண்டு பேரையும் தடுத்து நிறுத்தினார்கள். மேலும் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மீது 307 என்ற கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் முதுகில் காயம் அடைந்ததன் காரணமாக நண்பன் சுரேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தேவகோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு கொலைகளை தடுக்க வேண்டி எடுத்த நடவடிக்கையின் காரணமாக இந்த கொலை சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.