Breaking News, District News, Madurai, State

மின்கட்டணம் உயர்வு கட்டாயம்?உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Photo of author

By Parthipan K

மின்கட்டணம் உயர்வு கட்டாயம்?உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடையே கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர்கள் நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக  முடிவெடுக்கவும் ,கருத்து கேட்கும் கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க  வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி மின் கட்டண உயர்வு தொடர்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். அதனையடுத்து மின்கட்டண அறிவிப்புகள் வெளியிடப்படும் நேரத்தில் இந்த உத்தரவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது . அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு இறுதி முடிவு எடுக்க தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரம்! பன்னீர் செல்வத்திற்கு விரைவில் சம்மன் சிபிசிஐடி காவல்துறை அதிரடி!

இன்று கேரளா புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! பினராயி விஜயனுடன் சந்திப்பு!

Leave a Comment