பொன்னியின் செல்வன் சிங்கிள் வெளியீடு… கார்த்தி & ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

Photo of author

By Vinoth

பொன்னியின் செல்வன் சிங்கிள் வெளியீடு… கார்த்தி & ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்

மணிரத்னம் தன்னுடைய நீண்டகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இதையடுத்து நேற்று பொன்னி நதி பாக்கணுமே பாடல் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி , ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கார்த்தி பேசியபோது “இது நம் தமிழர்களின் படம். இந்த கதை அனைவருக்குமே தெரியும் என்றாலும், நாம் அனைவரும் திரைப்படமாக பார்க்க ஆர்வமாக இருக்கிறோம். இந்த படத்தை 120 நாட்களில் இரண்டு பாகங்களையும் படமாக்கி முடித்துள்ளோம்.” எனப் பேசினார்.

பின்னர் பேசிய ஜெயம் ரவி “சந்திரலேகா போல ஒரு பிரம்மாண்டமான படமாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. எத்தனையோ லெஜண்ட்ஸ் இந்த திரைப்படத்தை படமாக்க நினைத்தார்கள். ஆனால் மணிரத்னத்தால்தான் முடிந்தது.” எனக் கூறியுள்ளார்.