பேனருக்கெல்லாம் சண்டை போட்டால் எப்படி? திமுக-பாஜக செய்யும் ரகளை!! போலீசாரிடம் வாக்குவாதம்?

0
126
How about fighting for the banner? DMK-BJP's Rallies!! Argument with the police?
How about fighting for the banner? DMK-BJP's Rallies!! Argument with the police?

பேனருக்கெல்லாம் சண்டை போட்டால் எப்படி? திமுக-பாஜக செய்யும் ரகளை!! போலீசாரிடம் வாக்குவாதம்?

சேலம் மாநகராட்சியில் 1வது வார்டு மாமங்கம் ஊற்று கிணறு பகுதியில் மாநகராட்சி சார்பில் 36 தெரு விளக்குகள் மற்றும் ரூ.14.61 லட்சத்தில் அவ்விடங்களுக்கு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பாமக வினர் அனைவரும் சேர்ந்து எம்.எல்.ஏவுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

பேனரையும் வைத்து கொண்டாடி வந்தனர். இதற்கு திமுகவை சேர்ந்த சில கவுன்சிலர்கள் இந்த விளக்குகள் மாநகராட்சியில் இருந்து அமைக்கப்பட்டது. அதற்கு என்றும் நீங்கள் அமைத்ததல்ல என்று கேள்வி எழுப்பினர்.எம்.எல் .ஏ நிதியில் அமைத்த  பேனராக இருந்தால்  வைத்துக் கொள்ளலாம் அடுத்தவர் செய்ததை தாங்கள் செய்ததாக கூறி பேனர் வைப்பது கேவலம் என்று முற்றுகையிட்டனர்.

 இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் திமுக பகுதி செயலாளர், கவுன்சிலர் தமிழரசன் செயலாளர் அரிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகளும் மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம் போன்ற பல நிர்வாகிகளும் அங்கு திரண்டதால் போக்குவரத்து அதிகளவில் பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் போலீசார் இரு தரப்பினர் கிடையே பல மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர்.பின்னர் காவல் துறையினர் இங்கு யாரும் பேனர் வைக்க கூடாது.அதையும் மீறி பேனர் வைத்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு படையினரை  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசர்கள் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
Parthipan K