குழாயடி சண்டை, அதிர்ந்த பெண் வீட்டார்!! நின்று போன திருமணம், இளைஞர் வேதனை!!

Photo of author

By Jayachithra

கர்நாடக மாநிலத்தில் தாவணகெரே மாநிலத்தில் மெலபனுர் பகுதியில் குழாயடி சண்டையை கண்ட பெண் வீட்டார் அந்த ஊர் இளைஞருக்கு பெண் கொடுக்க மறுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெலபனுர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். மேலும் டவுன் சபை முன்பு பொதுமக்கள் காலி குடங்களை வைத்துக்கொண்டு போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.

இருப்பினும் அதிகாரிகள் பொது மக்களின் போராட்டத்தை பெரிது படுத்தவில்லை. இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்களுக்கு கோபம் அதிகரித்தது. இத்தகைய நிலையில் பெண்கள் முடியை பிடித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை இடம் சூழ்நிலை உருவாகியது.

அதேநேரத்தில் அப்பகுதியில் வேறு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமண பேச்சுவார்த்தை நடைபெற்று வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் இளைஞரின் வீட்டிற்கு பெண் வீட்டினர் பார்வையிட வந்துள்ளனர்.

அப்பொழுது குழாய்களில் நீர் வந்து கொண்டிருந்ததால் மக்கள் தண்ணீர் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது தண்ணீர் எடுக்கின்ற இடத்தில் பெண்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் அடித்துக்கொள்ள துவங்கியுள்ளனர்.

அப்பகுதி இளைஞருக்கு பெண் கொடுக்க வந்த குடும்பத்தினர் இந்த குழாயடி சண்டையை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்து இந்த சம்பந்தமே வேண்டாம் என்று உடனடியாக கிளம்பி சென்றனர். பின்னர் இளைஞரின் குடும்பத்தினர் மீண்டும் பெண் வீட்டினர் அழைத்து பேசியுள்ளனர். ஆனால் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.

தொடர்ந்து நேரிலும் சென்று இதுகுறித்து பெண் வீட்டாரிடம் கேள்வி எழுப்பிய போது, “உங்கள் பகுதியில் நடந்த குழாயடி சண்டையை நாங்கள் பார்த்தோம். மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்கள் ஊருக்கு பெண் கொடுக்கவே மாட்டோம்.” என்று திட்டவட்டமாக கூறி இருக்கின்றனர். குழாயடி சண்டையால் ஒரு இளைஞருக்கு பெண் கிடைக்காத சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.