வயது அதிகமான நடிகையுடன் திருமணம்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

0
255
#image_title

வயது அதிகமான நடிகையுடன் திருமணம்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

பிரபல நடிகரான கிஷோர் ஒரு சீரியல் நடிகையை மணந்து கொண்டதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த திரைத்துறையினரும், ரசிகர்களும் பிரம்மித்துள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளி வந்த “பசங்க” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் கிஷோர். இவர் அன்பு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். மேலும் விமல், வேகா, ஜெயப்பிரகாஷ், பக்கோடா பாண்டி, ஸ்ரீ ராம் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திர தேசிய விருதையும் பெற்றுள்ளார். இதனை அடுத்து விஜய் மிலடனின் “கோலி சோடா” படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் அவருக்கு வெற்றியை தேடி தந்தது.

இந்த நிலையில் இவரின் திருமணம் ரசிகர்களிடையே பெரும்பாலும் பேசப்பட்டு வருகிறது. சில மாதங்களாகவே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ப்ரீத்தியும் இவரும் காதலித்து வந்தனர்.

இவர்கள் காதலை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சில நாட்களிலேயே இருவரும் தங்களது பெற்றோர்களின் விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ப்ரீத்தி கிஷோரை விட நான்கு வயது மூத்தவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் யூடியூப் சேனலில் பேட்டி அளித்துள்ளனர்.

அந்த பேட்டியில், தங்களது திருமணம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த ப்ரீத்தி, எங்கள் இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் ஒரு பெரிய அளவாக தெரியவில்லை என்றும், எனக்கு கிஷோரை பிடித்திருக்கிறது அவருக்கு என்னை பிடித்திருக்கிறது இதில் வயது ஒரு பெரிய தடை இல்லை என்றும் கூறி உள்ளார்.

மேலும், எனது தந்தையின் உடல்நலம் சரி இல்லாமல் இருந்ததால் யாரையும் அழைக்காமல் அவசரமாக நடத்தப்பட்டது என்றும் என் தந்தையின் உடல்நலம் நன்றாக இருந்திருந்தால் திருமணத்தை அனைவரின் முன்னிலையிலும் சிறப்பாக நடத்தி இருப்போம் என்றும் உருக்கத்துடன் கூறி உள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரின் திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பெரும்பாலானோர் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றன.

 

Previous articleடாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!!
Next articleரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் !!  இனி உறுப்பினர் பெயரை இப்படியே சேர்க்கலாம் !!