மருதாணியில் உள்ள மகத்துவம்!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போயிடுச்சே!!

Photo of author

By Jayachithra

மகாலட்சுமியின் அம்சமே மருதாணி ஆகும். மகாலட்சுமி வாசம் செய்யும் மருதாணி சுக்கிரனின் அம்சம் என்பர். மேலும், மருதாணி உடல் சூட்டை தணித்து குளுமை அதிகமாக ஏற்படுத்தும்.

இதனுடைய பூ மற்றும் இலை, விதை, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. வெள்ளிக்கிழமைகளில் மருதாணியை சுமங்கலிப் பெண்கள் தங்களது கைகளில் வைத்துக் கொண்டால், அவர்களுக்கு மாங்கல்ய பலம் உண்டாகும்.

யார் மேல் அதிக அன்பு ?

ஒருவர் கையில் மருதாணி இடும்போது, மருதாணி வைக்கப்பட்ட கை சிவந்தாள் எந்த நம்பர் மருதாணி வைத்தாரோ, அவர் மிகவும் பாசமாக இருப்பதை உணர்த்தும்.

ஆயுர்வேதம் மருதாணி பற்றி கூறுவது:

மருதாணி சரியான நிறத்தில் சிவந்தாள் அதனை வைத்தவர்களுக்கு குழந்தை பிறப்பு சரியான முறையில் இருக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும், சிலருக்கு ஆரஞ்சு நிறமாக பிடிக்கும். அடர் சிவப்பாக அழகாக இருக்கும். மருதாணி சிவக்காமல் மஞ்சள் குளித்தால் அது உடம்புக்கு நல்லது அல்ல.

அதிகம் கருத்து விட்டால் அது பித்த உடம்பு ஆகும். இரண்டு நிலைகளிலும் கருத்தரிப்பது மிகவும் தாமதமாகும் என்கிறது ஆயுர்வேதம். சுக்கிரனின் அம்சமாக மருதாணி இலை மிகச் சிறந்த கிருமி நாசினியாகும். கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழித்துவிடும்.மேலும், மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த ஒரு நோயும் வராமல் பாதுகாக்கலாம். மருதாணி பூக்களை பறித்து உலர்த்தி தலையணைகளில் உபயோகித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.

ராமாயணத்தில் மருதாணியின் முக்கியத்துவம்:

ராமாயணத்தில் ராமர் ராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்ட போது சீதாதேவி ராமரிடம், ‘இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்க இந்த மருதாணி செடிக்கு ஏதாவது ஒரு நன்மையை நான் செய்ய வேண்டும் என்று கோரி, மருதாணி செடி இடம் உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.

உங்களைப் போலவே அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே எனக்கு போதும் என்றது மருதாணி செடி’. அதற்கு சீதா தேவி, ‘உன் குணத்திற்காக நான் ஒரு வரம் தருகிறேன் என்று கூறினார். மேலும், உன்னை யார் கூறுகிறார்களோ அல்லது உன்னை யார் கைகளில் வைத்துக்கொண்டு கொள்கிறார்களோ, அவர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும் என்றும், அவர்களின் வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக இருக்கும் என்ற வரத்தை தந்தார்.

அதனால்தான் இன்றுவரை திருமணத்திற்கு முந்தைய நாள் மருதாணி வைத்து விழா நடத்துகிறார்கள். ஏனெனில், மகாலக்ஷ்மியின் அருள் ஆனது மணமகளுக்கும் திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர் களுக்கும், பெண்களுக்கும் கிடைக்கும் என்பதன் காரணம் ஆகும்.