பள்ளி மற்றும் கல்லூரிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Photo of author

By Parthipan K

பள்ளி மற்றும் கல்லூரிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Parthipan K

Masks are mandatory in schools and colleges! Action order issued by the government!

பள்ளி மற்றும் கல்லூரிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.

கொரோனா பரவல் அதிகரித்து  வந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டு பொது தேர்வுகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதிய உருமாறிய கொரோனா மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.சீனாவில் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் குவைத்தில் இருந்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினருடன் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்தார்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் பெங்களூரு,மங்களூரு உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் பள்ளி,கல்லூரிகள்,திரையரங்கம், குளிரூட்டப்பட்ட அறைகள் உட்பட்ட அரங்குகளில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.மெட்ரோ ரயில்,பேருந்து ஆகிய பொதுமக்கள் அதிகளவு கூடும் பகுதிகளில் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் சளி,காய்ச்சல்,இருமல் ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அனைத்து பொதுமக்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் வரும் புத்தாண்டு போன்ற பண்டிகைகளை உரிய கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.