இந்தியா வெற்றி பெறக் காரணமாக அமைந்த அக்ஸர் படேலின் இரண்டு ஓவர்கள்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி 8 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டு நடந்து முடிந்தது.
இந்தியாவுக்கு ஆஸி அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி 20 போட்டி நாக்பூரில் நடந்தது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக இந்த போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி 8 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 90 ரன்களை சேர்த்தது. இந்த இன்னிங்ஸில் இந்திய வீரர்களின் பந்துவீச்சுகளை ஆஸி பேட்ஸ்மேன்கள் பதம் பார்த்த நிலையில் அக்ஸர் படேல் வீசிய இரண்டு ஓவர்கள்தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அவர் இரண்டு ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கியமான விக்கெட்களை வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் எல்லோருமே ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் கொடுத்த நிலையில் இந்த இரு ஓவர்கள் ஆஸி அணியின் ரன் வேகத்தை மட்டுப்படுத்தின.
இந்நிலையில் போட்டிக்கு பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் கேப்டன்கள் இருவருமே அக்ஸர் படேலின் பந்துவீச்சை பாராட்டி பேசினர்.