வாங்க இந்தியா… நாங்ல வெய்ட் பண்றோம்… பாகிஸ்தான் ஆலோசகர் பேச்சு!

0
168

வாங்க இந்தியா… நாங்ல வெய்ட் பண்றோம்… பாகிஸ்தான் ஆலோசகர் பேச்சு!

இந்திய அணியை பைனலில் எதிர்கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யு ஹெய்டன் கூறியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நியுசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இறுதிப் போட்டிக்கு முதல் ஆளாக சென்றுள்ளது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் மிட்செல் அரைசதம் அடித்தார். இதன் பின்னர் 153 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரின் அபாரமான அரைசதத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய பாகிஸ்தான் அணியின் ஆலோசகரும் முன்னாள் ஆஸி பேட்ஸ்மேனுமான மேத்யு ஹெய்டன் இந்தியாவை இறுதிபோட்டியில் சந்திக்க ஆவலாக உள்ளதாகக் கூறியுள்ளார்.

இது பற்றி பத்திரிக்கையாளர்கள் இறுதிப் போட்டிக்கு எந்த எதிரணியைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டபோது, ​​”பெரிய காட்சியின் காரணமாக நான் இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் விளையாட விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார். இந்த தொடரின் லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மிகவும் பரபரப்பாக சென்று இந்தியா வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்திய அணி இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநாக் அவுட்டில் இந்தியா vs இங்கிலாந்து… அணியில் யார் யாருக்கு இடம்?
Next articleதென் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் திடீர் விஜயம்! காரணம் என்ன?