Breaking News, State

மே 1 கிராம சபை கூட்டம்! தமிழக அரசு உத்தரவு

Photo of author

By Vijay

மே 1 கிராம சபை கூட்டம்! தமிழக அரசு உத்தரவு

Vijay

Button
மே 1 கிராம சபை கூட்டம்! தமிழக அரசு உத்தரவு.
மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி, அனைத்து ஊராட்சிகளிலும் 1ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணிக்கு கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வெளியான அறிக்கையில், கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது என்றும், கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து பதிவு செய்திடும் பொருட்டு கைபேசி செயலி ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளதாகவும். அதனைப் பயன்படுத்தி, நிகழ்நேர(நேரடி) கிராம சபை கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்ய அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மே 1 ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கவும், கூட்டம் தொடர்பான அறிக்கையினை அரசிற்கு வரும் 5ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும் அறிவுருத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் வெடித்து சிறுமி பலி! கேரளாவில் சோகம்

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாற்றம்! அமைச்சர் அறிவிப்பு