12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாற்றம்! அமைச்சர் அறிவிப்பு

0
174
#image_title
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாற்றம்! அமைச்சர் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தமிழ் பாடத்துடன் தொடங்கியது. இந்த தேர்வை எழுத 8.75 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு பாடங்களுக்கும் தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 3-ம் தேதியுடன் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள், மாநிலம் முழுவதும் 79 மையங்களில் நடைபெற்றது. இந்த பணியில் சுமார் 48 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி அடுத்த மாதம் மே மாதம் 5-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மே 7-ம் தேதி அன்று நீட் தேர்வுகள் நடைபெறுவதால், மே 5-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மே 5-ம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியானால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படக்கூடும் என்பதாலும், இதனால் நீட் தேர்வுகளில் முழு அளவில் மனதை ஒருமுகப்படுத்தி தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், இரண்டு நாட்கள் கழித்து முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித்துறை பரீசிலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.