மயிலாடுதுறை சீர்காழி பருவமழை எதிரொலி: எனக்கு அவர்களைப்பற்றி அறவே கவலை இல்லை-முதல்வர் ஸ்டாலின்!
தற்பொழுது பெய்து வரும் பருவமழையால் மயிலாடுதுறை சீர்காழியில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அங்குள்ள மக்கள் செய்தியாளர் சந்திப்பு பேட்டியில், எங்க நிலையை காண எந்த ஒரு அரசியல்வாதியும் வரவில்லை. ஓட்டு போடும் போது மட்டும் பலமுறை வந்து ஓட்டு கேட்கிறார்கள். நாங்கள் இவ்வாறு அவதிக்கு உள்ளாகும் நிலையில் எங்களுக்கு கை கொடுக்க ஓர் ஆள் கூட இல்லை என்ற ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.
இந்த பேட்டியானது இணையத்தில் தீயாக பரவியது. இதனையடுத்து உடனடியாக முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை சீர்காழியை நோக்கி பயணம் மேற்கொண்டனர். அவ்வாறு சென்றவர்கள் அங்கு உள்ளவர்களை கண்டு அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினர். பின்பு செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் பேட்டி அளித்தார்.அதில், சீர்காழியில் தற்பொழுது செயல்படுத்தி வரும் மீட்பு பணிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது.
மாவட்ட ஆட்சியர் நன்றாக பணிபுரிந்து உள்ளார். மக்களும் நிம்மதியாக இருக்கின்றனர். மக்களிடமிருந்து சில குறைகள் கேட்கப்பட்டுள்ளது அவையும் சில நாட்களில் நிறைவேற்றி தரப்படும். குறைந்தபட்சமாக ஐந்து அல்லது ஆறு நாட்களில் அனைத்தும் நிவர்த்தி அடைந்து சரியாகும் என்று கூறினார். ஆனால் அங்குள்ள மக்களின் குறைகளோ நிவர்த்தியாகும் படி இல்லை என்பதுதான் உண்மை.
இவ்வாறு இருக்கும் வேளையில் மழை நீரில் மூழ்கிய வேளாண் பயிர்களுக்கு ஏக்கருக்கு எந்த தொகையும் குறிப்பிடாமல் இழப்பீடு வழங்குவதாக கூறியுள்ளனர். மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் இந்த மழையால் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருமளவு நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை ஈடுகட்ட தமிழக அரசு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த இழப்பீடு குறித்து பல கட்சிகளும் பல விமர்சனங்களை கூறி வருகின்றனர். இது குறித்தும் முதல்வர் ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஸ்டாலின் கூறியது, பருவ மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எதிர்க்கட்சி என தொடங்கி அனைவரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த இழப்பீடு தொகையை வைத்து அனைவரும் அரசியல் நடத்த தான் எதிர்பார்க்கின்றனர். எனக்கு அது பற்றி எல்லாம் ஒருபோதும் கவலை இல்லை. எந்தெந்த பகுதிகள் பாதிப்படைந்துள்ளது என்பதை குழு அமைத்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு முடிந்ததும் கூடிய விரைவிலேயே அந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கப்படும்.அதற்கான தொகையும் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.