MBBS, BDS கலந்தாய்வு அறிவிப்பு!! வீட்டிலிருந்தே கலந்து கொள்ளலாம்!!

0
99

MBBS, BDS கலந்தாய்வு அறிவிப்பு!! வீட்டிலிருந்தே கலந்து கொள்ளலாம்!!

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு சேர்வதற்கான கலந்தாய்வு வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது.

மேலும் இவர்களுக்கான தரவரிசை பட்டியல் 16ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு வரும் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரையில் முதல் சுற்று மாணவர் சேர்க்கை நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமாக 36 மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன, இதில் மொத்தமாக ஐந்தாயிரத்து ஐம்பது இடங்கள் உள்ளன. மேலும் இரண்டு பல் மருத்துவ கல்லூரிகளில் 200 இடங்களும், இஎஸ்ஐ மருத்துவ கல்லூரிகளில் 150 இடங்களும் உள்ளன.

இதில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு மட்டும் மொத்தமாக 40 ஆயிரத்து 193 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்லூரிகளில் சேர்வதற்க்கான கலந்தாய்வு வரும் 22 ஆம் தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வு கூட்டம் அறிவுள்ளது. இதில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கலந்தாய்வு என அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போதை நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு போதிய கால அவகாசம் இல்லை என தெரியவந்துள்ளது. எனவே மாநில ஒதுக்கீட்டிற்கான இடங்களும் அன்றைய தினமே நடைபெற உள்ளது.

இந்த கலந்தாய்விற்க்கு நேரடியாக வர முடியாத மாணவர்கள் வீட்டிலிருந்து இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் எனவும் மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள மையங்களில் இருந்தும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என மருத்துவ குழு அறிவித்துள்ளது.

Previous articleஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு திரைப்படம்! ஹீரோவாக நடிக்கும் ராணா டகுபதி!!
Next articleதொடர்ந்து 3வது முறையாக பெண் குழந்தை! மனைவியை பட்னி போட்டு கொடுமை செய்த கணவன் கைது!!