எம்.சி.ஏ படிப்பை 3 ஆண்டிலிருந்து 2 ஆண்டாக குறைத்து அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கழகம் அறிவித்துள்ளது.தற்பொழுது எம்.சி.ஏ படிப்புகளுக்கான வேலை வாய்ப்பு குறைந்து வருவதால் எம்.சி.ஏ படிப்பில் சேரும் ஆர்வம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது.மேலும் இளநிலைப் படிப்புகளை முடித்து மேலும் 3 ஆண்டுகள் படிக்க வேண்டும் என்பதால் இந்த படிப்பை அதிக மாணவர்கள் தேர்வு செய்வதில்லை.இதனை தவிர்க்கும் வகையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து இந்த எம்.சி.ஏ படிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளடங்கியுள்ளன.அந்த வழிகாட்டுதலில் பி.சி.ஏ படித்தவர்கள் 2 வருடம் எம்.சி.ஏ படித்தால் போதுமானது.மேலும் இதர இளநிலை படிப்புகளை முடித்தவர்கள் மூன்று ஆண்டுகள் கட்டாயமாக எம்.சி.ஏ படிப்பை படிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து யு.ஜி.சி யின் 545 ஆவது கூட்டத்தின் முடிவை அடுத்து மூன்று ஆண்டுகளாக இருந்த எம்.சி.ஏ படிப்பை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவித்துள்ளது.பி.எஸ்சி,பி.சி.ஏ மற்றும் இதர இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக எம்.சி.ஏ படிப்பில் சேர்ந்து கொள்ளலாம்.கடந்த ஆண்டு எம்.சி.ஏ சேர்ந்தவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை மேலும் பல்கலைக்கழக குழும ஒப்புதலை அடுத்து 2020-21 ஆண்டுக்கான புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.