சிக்கன் சுவையில் மீல் மேக்கர் கிரேவி.. இந்த முறையில் செய்தால் செம்ம டேஸ்டாக இருக்கும்!!

0
165
#image_title

சிக்கன் சுவையில் மீல் மேக்கர் கிரேவி.. இந்த முறையில் செய்தால் செம்ம டேஸ்டாக இருக்கும்!!

புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் பலரும் நான்-வெஜ் சாப்பிட முடியவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறார்கள்.அந்த வருத்தத்தை போக்க மீல் மேக்கரில் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி குக் செய்து சாப்பிட்டு பாருங்கள்.அசல் சிக்கன் கிரேவி சாப்பிட்டது போல் உணர்வீர்கள்.

தேவையான பொருட்கள்:-

*மீல் மேக்கர் – 250 கிராம்

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*பூண்டு – 10 பற்கள்

*இஞ்சி – சிறு துண்டு

*சின்ன வெம்கயம் -10

*தக்காளி – 1(பெரியது)

*கொத்தமல்லி தூள் -1 தேக்கரண்டி

*சோம்பு – 1/2 தேக்கரண்டி

*கிராம்பு – 4

*பிரிஞ்சி இலை – 1

*பட்டை – 1

*நெய் – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி இலை – சிறிதளவு

*கருவேப்பிலை – 2 கொத்து

*முந்திரி – 4

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*கரம் மசாலா – 1 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

1.அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 2 அல்லது 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து 250 கிராம் மீல் மேக்கரை அதில் சேர்க்கவும்.அவை 10 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும்.

2.பின்னர் மீல் மேக்கரை அந்த நீரில் இருந்து தனியாக எடுத்து தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

3.அடுப்பில் ஒரு குக்கர் அல்லது கடாய் வைத்து அதில் 3 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.எண்ணெய் மற்றும் நெய் சூடானதும் அதில் 1/2 தேக்கரண்டி சோம்பு,பட்டை,இலவங்கம்,பிரிஞ்சி இலை,முந்திரி,கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும்.

4.பொடிதாக நறுக்கிய சின்ன வெங்கயம்,இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.அவை வதங்கிய பின் அதில் பொடிதாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து கொள்ளவும்.

5.பின்னர் மீல் மேக்கர் போட்டு அதனுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,மல்லி தூள்,கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும்.அந்த சமயம் அடுப்பை மிதமான சூட்டில் வைத்திருக்க வேண்டும்.

6.மீல் மேக்கருடன் மசாலா பொருட்கள் நன்கு வதங்கிய பிறகு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து ஒருமுறை கிளறி விட வேண்டும்.

7.15 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

Previous articleநிகழப்போகும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் 2023 : அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்!
Next article“சைவ முட்டை” வறுவல் இப்படி செய்தால் செம்ம ருசியாக இருக்கும்!! இன்றே முயற்சி செய்யுங்கள்!