இந்த பகுதியில் இறைச்சி கடைகள் செயல்பட தடை! மீறினால் கடும் நடவடிக்கை!
கோவை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.அதனால் அன்று தமிழக அரசால் ஆடு,மாடு மற்றும் கோழி ஆகியவைகளை பலி கொடுக்க கூடாது.மேலும் இறைச்சிகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனால் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி ,கோழி இறைச்சி,மாட்டிறைச்சி ,பன்றி இறைச்சி கடைகளை அக்டோபர் இரண்டாம் தேதி திறக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம் ,சக்தி ரோடு ,போத்தனூர் அருவைமனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சி கடைகளும் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.