கற்பூரத்தின் மருத்துவ பயன்கள்!

Photo of author

By Kowsalya

கற்பூரத்தில் இரண்டு வகை உண்டு பச்சை கற்பூரம் மற்றும் வேதி கற்பூரம். பச்சை கற்பூரம் அனைத்து இனிப்பு பொருட்களுக்கு நறுமணம் சேர்க்கவும், ஆலய வழிபாட்டிற்கும் பயன்படுத்துகின்றனர். இந்த கற்பூரம் ஆரோக்கியம் மெடிக்கா என்ற தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. மற்றொன்று ரசாய கற்பூரம் வேதிப்பொருள் கலந்து ஆலய வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் காற்று மாசுபாட்டை உண்டாக்குகிறது.

இதில் இயற்கை கற்பூரத்தின் பயன்கள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவு.

1. இந்த பச்சைக்கற்பூரம் மனதிற்கு புத்துணர்ச்சி தரும். இதன் மணம் நேர்மறை எண்ணங்களை சிந்திக்க சொல்லும். நல்ல எண்ணங்கள் உணர்வுகள் மேலோங்கச் செய்யும்.

2. பாக்டீரியாக்களை அழிக்க செய்யும் ப்ளீச்சிங் பவுடரின் இது பயன்படுத்தப்படுகிறது.

3. இது ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது.

4. அரிப்பு, சொறி, சிரங்கு புண் ஆகிய நோய்கள் குணமாக மேல் பூச்சாக பச்சை கற்பூரத்தை பூசி வர விரைவில் குணமாகும்.

5. சேற்றுப் புண் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயுடன் பச்சை கற்பூரத்தை கலந்து பூசிவர சேற்றுப்புண் குணமடையும்.

6. வெயிலின் தாக்கத்தால் சருமம் கருமை நிறம் அடைவதை தடுக்க சந்தனத்துடன் சிறிது பச்சை கற்பூரத்தை கலந்து பூசிவர நிறம் மாறுவதை தடுக்கலாம்.

7. பாடாய்படுத்தும் கால் வெடிப்பு சரியாக ஒரு பாத்திரத்தில் சுடு நீரை வைத்து அதில் சிறிது பச்சை கற்பூரத்தை சேர்த்து அந்த சூடு பொறுக்க வெடிப்பு உள்ள காலில் ஒத்தடம் இட குதிங்கால் வெடிப்பு சரியாகும்.

8. சந்தனம் மற்றும் துளசியுடன் கற்பூரத்தைக் கலந்து தலையில் பற்றிட தலைவலி நீங்கும்.

9. ஒற்றை தலைவலி நீங்க எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது கற்பூரத்தை கலந்து தேய்த்து விட ஒற்றைத் தலைவலி நீங்கும்.

10. தசை பிடிப்பு, மூட்டு வலி ஆகியவற்றிற்கு கற்பூர எண்ணெயை தடவி வர குணமாகும்.

11. தேங்காய் எண்ணெய், கற்பூர எண்ணெய் இரண்டையும் கலந்து தேய்த்து வர முடி நன்கு கருமையாகவும் வளரும்.

12. பேன் பொடுகு நீங்க துளசி சாற்றுடன் கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்து குளித்துவர பிரச்சனை தீரும்.

13. பல் வலி உள்ளவர்கள் கிராமுடன் கற்பூரத்தை சேர்த்து பல் துலக்கி விட்டு, வலியுள்ள இடத்தில் வைத்து கடித்துக் கொண்டால் பல்வலி குணமாகும்.

14. கொசு கடிக்கு கற்பூர எண்ணெயை கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். கொசு கடிக்காது.

15. காயம் ஏற்பட்ட இடத்தில் கற்பூரத்தை தடவிவந்தால் விரைவில் குணமடையும்.

16. சிறிது கற்பூர எண்ணெயை தலையணையில் இரண்டு சொட்டு வைத்து விட்டு தூங்க செல்லும் பொழுது நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.