இந்தியாவில் அதிகரித்த ஆணுறை விற்பனை! அதிரவைக்கும் புதிரான தகவல்கள்.??

Photo of author

By Jayachandiran

இந்தியாவில் அதிகரித்த ஆணுறை விற்பனை! அதிரவைக்கும் புதிரான தகவல்கள்.??

இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் பல்வேறு வணிக மற்றும் அத்தியாவசிய தேவையற்ற கடைகள் ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட நிலையில், மக்களுக்கு தேவையான மளிகைகடை, பால்விநியோகம், பெட்ரோல் பங்க், மெடிக்கல் மற்றும் மருந்தகம் சார்ந்த கடைகளுக்கு மட்டுமே அரசு திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்திய மக்கள் வீட்டில் முடங்கிய நிலையில் ஆணுறை விற்பனை தற்போது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மும்பை பகுதியின் மக்கள் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாய சூழலினால், அத்தியாவசிய பொருட்களைப் போலவே ஆணுறை விற்பனையும் வழக்கத்தை விட தற்போது அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பினால் தொற்று ஏற்படும் என்ற அச்சத்தினால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி சேமித்து வைத்துக் கொள்வதில் மக்கள் கவனமாக உள்ளனர்.

பொதுவெளி மற்றும் பொழுதுபோக்கான இடங்களில் செல்லவும் முழுத்தடை உத்தரவு இருப்பதால் பலர் குடும்பத்தோடு அதிக நேரத்தை செலவிடும் சூழல் அதிகரித்துள்ளது. உணவு மற்றும் சுகாதார பொருட்களை வாங்கி குவித்த மக்களிடையே ஆணுறை விற்பனை இப்போது மிக அதிகளவு நடந்துள்ளது. நாட்டின் பல்வேறு மருந்தம் மற்றும் சில்லறை கடைகளின் மூலம் 20% விற்பனையில் இருந்து 50% வரை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தென் மும்பையில் மருத்துவ/மருந்தக கடை உரிமையாளராக இருக்கும் ஹர்ஷல் ஷா என்பவர் முக்கிய தகவலை கூறியுள்ளார். மக்கள் தற்போது அதிக நேரம் வீட்டில் இருப்பதன் காரணமாக சலிப்படைந்து இருக்கிறார்கள். எப்போதும் சிறிய அளவிளான ஆணுறை பேக்குகளை வாங்கும் மக்கள் தற்போது பெரிய அளவிளான பேக்குகளை வாங்குகிறார்கள். இதனால் ஆணுறை விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. 3 அல்லது 4 பேக்குகளை வாங்குபவர்கள் தற்போது பத்து எண்ணிக்கையிலான பேக்குகளை வாங்குவதாக கூறியுள்ளார்.

டெல்லி குருகிராமில் உள்ள மெடிகோசில் உள்ள தினேஷ்குமார் ஷர்மா கூறுகையில்; கடந்த சில நாட்களாக ஆணுறை மற்றும் கருத்தடை சார்ந்த பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். இதுபோன்ற பொருட்களை ஆண்களை விட டெல்லி பகுதி பெண்கள் அதிகம் வாங்குவதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.