கணவன் இறந்த துக்கத்தை மறந்து ஓணம் கொண்டாடிய மீனா!..

Photo of author

By Parthipan K

கணவன் இறந்த துக்கத்தை மறந்து ஓணம் கொண்டாடிய மீனா!..

Parthipan K

Updated on:

Meena celebrated Onam forgetting the grief of her husband's death!..

கணவன் இறந்த துக்கத்தை மறந்து ஓணம் கொண்டாடிய மீனா!..

கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்க திருவிழா தான் இந்த ஓணம் பண்டிகை.சாதி,மத வேறுபாடு இன்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள்.

இந்த விழாவில் பெண்கள் கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும் பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள்.பத்து நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும்.முக்கியமாக களறி ,படகுபோட்டி,பாரம்பரிய நடனப்போட்டி போன்றவைகள் நடைபெறும்.

இதனை தொடர்ந்து பல தலைவர்களும்,நடிகர்களும் நடிகைகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்  நடிகை மீனாவும்  அவரது வாழ்த்துகளை தெரிவித்தார்.இவரது கணவர் திடிரென்று நுரையீரல் பிரச்சனை காரணமாக வித்யாசாகர் மரணம் அடைந்தார்.

அவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினரையே  நிலைகுலைய வைத்து விட்டது.இருப்பினும் மீனா பல கஷ்டங்களையும் தாண்டி கணவன் இழப்பிலிருந்து மெதுவாக மீள தொடங்கினார்.தற்போது மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகையை நடிகை மீனாவும் கொண்டாடி வருகிறார்.

அதே வேளையில் பண்டிகையை கொண்டாடும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில்  பகிர்ந்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் தனது ரசிகர்களுக்கும் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றார்.

தனது கணவன் இறந்த துக்கத்திலும் ஓணம் கொண்டாடிவரும் நடிகை மீனா அவரின் செயலை கண்டு சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ய தொடக்கிவிட்டார்கள்.