சின்னத்திருவோணம் வந்தல்லோ கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் கலை கட்டும் ஓணம் பண்டிகை! 7 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

0
67

நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தை கேரள மாநில மக்கள் ஓனம் பண்டிகையாக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். அந்த விதத்தில் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

கேரளா மட்டும் அல்லாமல் மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் அந்த வகையில் தமிழ்நாட்டிலும் மலையாளம் பேசும் மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கடை இருக்கின்ற நிலையில், மாநில எல்லையில் இருக்கின்ற மாவட்டங்கள் மற்றும் கேரள மக்கள் அதிகமாக வசித்து வரும் மாவட்டங்களில் இருப்பவர்களும், இந்த விழாவை கொண்டாடும் விதத்தில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சென்னை, கோவை, திருவள்ளூர், நீலகிரி, போன்ற மாவட்டங்களில் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பூர், உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு நடுவே காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகங்களும், இன்று மாவட்டம் முழுவதும் விடுமுறையை அறிவித்து, அதன் பிறகு திரும்ப பெற்றிருக்கின்றன.