வாயில் வைத்ததும் கரையும் கேரளா ஸ்டைல் “நேந்திரம் பழ பர்ஃபி” – சுவையாக செய்வது எப்படி?
நேந்திர பழத்தை அரைத்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வந்து அதில் தேங்காய், சர்க்கரை சேர்த்து செய்யும் பர்ஃபி கேரளா மக்களின் பேவரைட் இனிப்பு பண்டமாகும். இந்த சுவையான பர்ஃபியை செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*நேந்திரம் பழ பேஸ்ட் – ஒரு கப்
*பால் – 1/2 கப்
*தேங்காய் துருவல் – 1/2 கப்
*சர்க்கரை – 1 கப்
*நெய் – 1/4 கப்
செய்முறை:-
How to make Nenthra Pazham Barfi:
ஒரு மூடி தேங்காயை எடுத்து துருவிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1/2 கப் பால் ஊற்றி கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஆறவைத்துக் கொள்ளவும்.
அடுத்து பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சி கொள்ளவும். பின்னர் ஆற வைத்துள்ள பால், வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவல், நெய், நேந்திரம் பழ விழுது சேர்த்துக் கிளறிக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் நேந்திரம் பழ பர்ஃபி அதிக சுவையில் இருக்கும்.