ஆண்களே உங்களின் அந்தரங்க பிரச்சனை சரி செய்ய பாலுடன் இது ஒன்றை மட்டும் கலந்து குடிங்க!! 

0
124
#image_title

ஆண்களே உங்களின் அந்தரங்க பிரச்சனை சரி செய்ய பாலுடன் இது ஒன்றை மட்டும் கலந்து குடிங்க!!

இந்த பதிவில் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும் முருங்கைப் பால் எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

 

முருங்கை மரம் நம் உடலுக்கு பலவிதமான சத்துக்களை தரக்கூடியது. வேப்பமரம் எவ்வாறு முழுவதுமாக மருந்தாக பயன்படுகிறதோ அது மாதிரியே முருங்கை மரமும் மருந்தாக பயன்படுகிறது.

 

இந்த முருங்கை மரத்தில் செடி முருங்கை, நீர் முருங்கை, தவசி முருங்கை, கொடி முருங்கை, புனல் முருங்கை என்று பலவிதமான முருங்கை வகைகள் உள்ளன. நமது வீடுகளில் இருப்பது நாட்டு முருங்கை ஆகும். இந்த முருங்கை மரத்தில் வேர், கீரை, காய், பூ, விதை, பட்டை ஆகியவை மருந்தாக பயன்படுகிறது.

 

முருங்கைப் பால் தயார் செய்ய தேவையான பொருட்கள்…

 

* பசும்பால்

* முருங்கைப் பிஞ்சு

* முருங்கை பூ

* கற்கண்டு

 

முருங்கை பால் தயார் செய்யும் முறை…

 

முதலில் அடுப்பை பற்ற வைத்து பாத்திரம் வைத்து அதில் எடுத்து வைத்துள்ள பாலை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பாலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ஏன் தண்ணீர் சேர்த்துக் கொள்கிறோம் என்றால் முருங்கை பிஞ்சை இதில் சேர்க்கும் பொழுது அது நன்றாக வேக வேண்டும். அதற்குத்தான் பாலில் தண்ணீர் சேர்த்துக் கொள்கிறோம்.

 

பிறகு எடுத்து வைத்துள்ள முருங்கை பிஞ்சை தோலுடன் இந்த பாலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் முருங்கையின் பூக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு வேகவைக்க வேண்டும்.

 

முருங்கை பிஞ்சு மற்றும் முருங்கை நன்கு வெந்த பிறகு இதை அடுப்பிலிருந்து இறக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்கு கடைந்து கொள்ளவும். கடைந்த பிறகு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதை வடிகட்டிய பிறகு இந்த பாலை மட்டும் குடிக்கலாம். சுவைக்காக இதில் சிறிதளவு கற்கண்டு சேர்த்து கலக்கி குடிக்கலாம்.

 

இளம் தம்பதியினர் தொடர்ந்து இதை குடிக்க வேண்டும். குழந்தைக்கு முயற்சி செய்பவர்களும் இந்த முருங்கை பாலை எடுத்துக் கொள்ளலாம். விந்தணு உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த முருங்கை பால் உதவுகின்றது.