மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.
இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். இன்று காலையில் சந்தோஷமான பாதையில் செல்லும் வாய்ப்பு உள்ளது. அதனை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.
குடும்ப உறவு இன்று சந்தோஷமாக காணப்படும். கணவன் மனைவியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யூனியம் உண்டாகும்.
பொருளாதாரம் முன்னேற்றம் அருமையாக உள்ளது. நீங்கள் கேட்டிருந்த கடன் உதவிகள் வந்து சேரும். வருமானம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகள் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் சுபிட்சமான வாழ்க்கை பார்ப்பார்கள். கலைத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்ப்பாராத ஒரு தன வரவு வர வாய்ப்பு உள்ளது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான சூழ்நிலை வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் சந்தோஷமான வாழ்வை காண்பார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு எதிராக தனவரவு வந்து சேரும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடக்கும்.