நாவூற வைக்கும் கோவைக்காய் பொறியல்… உடனே செஞ்சி கொடுங்க..!

0
84

கோவைக்காயை உணவில் சேர்த்து வர சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல், பொடுகு, முடி உதிர்வு, பல் பிரச்சனை போன்றவைகளுக்கு தீர்வளிக்கும். கோவைக்காயில் சுவையான பொறியல் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.

தேவையானவை :

கோவக்காய் – 300 கிராம் பச்சை மிளகாய் – 4 வெங்காயம் – 2 கடலை பருப்பு – 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி தனியா தூள் – 1 தேக்கரண்டி கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

கோவைக்காயை நறுக்கி கொள்ளுங்கள். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கொள்ளுங்கள்.

அதன்பின்னர், அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

அவை நன்றாக வதங்கியதும் கோவைக்காயை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் வேக விடவும்.

பாதி வேக்காட்டில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொள்ளுங்கள்.

வெந்ததும் இறக்கி சூடான சாத்துடன் சேர்த்து பரிமாறவும்.