தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது!
தேவையான பொருட்கள் :தூதுவளை இலை அரை கப், உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் இரண்டு,பெருங்காயம் அரை டீஸ்பூன், கடுகுஅரை டீஸ்பூன், நெய் இரண்டு டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை ,சாதம் ஒரு கப், உப்பு தேவையான அளவு.
செய்முறை : முதலில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து கொள்ள வேண்டும். அதனுடன் கடைசியில் தூதுவளை இலையையும் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
பிறகு வதக்கி வைத்ததை மிக்ஸியில் நைஸாக பொடி செய்து கொள்ள வேண்டும். வாணலியில் மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கடுகு தாளித்து, மஞ்சள்தூள் போட்டு, சாதத்தில் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். பிறகு, தூதுவளை பொடி, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.