தமிழகத்தில் தற்போது 6 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

0
157
Meteorological Center has issued Red Alert in 6 districts in Tamil Nadu at present.
Meteorological Center has issued Red Alert in 6 districts in Tamil Nadu at present.

தமிழகத்தில் தற்போது 6 மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

வங்க கடலில் கடந்த 13ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. தற்போது அது மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு மற்றும் வடக்கு கடற்கரைப் பகுதியை இன்று நெருங்குகிறது. எனவே கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புதுச்சேரியில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு திசையில் 300 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் காலையிலிருந்தே தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இருபத்தி ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இருபத்து ஆறு மாவட்டங்களிலும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற்பகலில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரிக்கும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களிலும் தற்போது கன மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஇவர்களுக்கு மட்டும் ரூ 5000 வெள்ள நிவாரண நிதி! அரசு வெளியிட்ட தகவல்!
Next articleநம் எல்லையில் சீனா உருவாக்கிய கிராமங்கள்! அதுவும் இத்தனையா? செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்!