ஒவ்வொரு ஆண்டும் நம் வீட்டில் உள்ள பழைய புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை எடைக்கு போடுவதன் மூலம் நமக்கு சிறிது அளவு பணம் கிடைக்கும். இதனையே மத்திய அரசு செயல்படுத்தி 2,364 கோடி ரூபாய் பணம் ஈட்டியுள்ளது.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது :-
சிறப்பு பிரச்சாரம் 4.0 வின் கீழ் இந்தியாவின் மிகப்பெரிய தூய்மை இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட பேப்பர்கள் மற்றும் மற்ற கழிவுகளை விற்பனை செய்து 2,364 கோடி ரூபாய் வருவாயாக பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் அரசு அலுவலகங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதே, இது நோக்கமாக இருந்த நிலையில், இதிலிருந்து மத்திய அரசுக்கு 2364 கோடி ரூபாய் வருவாயாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2021 ஆம் ஆண்டு முதலே அரசு சிறப்பு பிரச்சாரம் என்பதை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் அரசு அலுவலகங்களில் கழிவுகளாக தேங்கிய பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் மத்திய அரசுக்கு 2,364 கோடி வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக கடந்த அக்டோபரில் அரசு அலுவலகங்களில் இந்த கழிவுகளை விற்பனை செய்ததன் மூலம் 650 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைத்தது என அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசுக்கு அரசினுடைய அனைத்து அலுவலகங்களும் தூய்மையாக மாறியது மட்டுமின்றி அதன் மூலம் ஒரு வருவாயையும் ஈட்டி இருப்பது மத்திய அரசுக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.