மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு அடி வயிற்று வலி ஏற்படும். இதனை ஒவ்வொரு பெண்களும் மாதாமாதம் சந்தித்து தான் வருகின்றனர். மாதவிடாயின் போது அதிக அளவிலான இரத்தம் வெளியேறுவதால் கருப்பையில் தசைகள் சுருங்கும். இதன் காரணமாக தான் வலி ஏற்படும். இந்த வலி அதிகரிக்கும் போது பலர் வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்வர். ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் கண்டு கொள்வதே இல்லை. இப்போது இல்லை என்றாலும் வருங்காலத்தில் இதனால் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்பட அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளது. எனவே நாம் முடிந்த வரையில் எந்த விதமான மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளாமல் இயற்கையாகவே அதனை சரி செய்வது நல்லது. எனவே மாதவிடாயின் போது ஏற்படும் வலியை சரி செய்வதற்கான சில வழிமுறைகளை நாம் இப்பதிவில் பார்க்கலாம்.
இயற்கையான முறையில் மாதவிடாய் வலியை சரி செய்வதற்கான முறைகள்
- மாதவிடாயின் போது ஏற்படும் வலியை சரி செய்ய நாம் முதலில் நல்ல சத்தான உணவுகளை உட்கெள்வது அவசியம். அதிலும் மெக்னீசியம் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால் மாதவிடாயின் போது ஏற்படும் வலி குறையும். மேலும் இது போன்ற நேரங்களில் கீரை வகைகள், காய்கறிகள் மற்றும் தயிர் போன்ற உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
- மாதவிடாயின் போது அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும். எனவே நாம் உடல் சோர்வாக காணப்படும் இதனை போக்க நாம் கருப்பட்டியை உட்கொள்ளலாம். அதில் இயற்கையாகவே சோடியம் மற்றும் பொட்டாசியம் காணப்படுவதால் இது வலியையும், உடல் சோர்வையும் குறைக்க உதவுகிறது.
- மிகவும் எளிதாக இந்த வலியை சரிசெய்ய வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் லேசான மசாஜ் செய்யலாம். இதனை செய்வதன் மூலம் வலி குறைய அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளது.
மேற்கூறிய முறைகளை பின்பற்றி எளிமையான முறையில் மாதவிடாயின் போது ஏற்படும் வலியை சரிசெய்யலாம்.